‘பண்டிகை’ யைக் கொண்டாடும் ஆரா சினிமாஸ்

Get real time updates directly on you device, subscribe now.

pandigai

சென்ற வாரம் ஜூலை 14-ஆம் தேதி ரிலீசான “பண்டிகை” ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கிருஷ்ணா- ஆனந்தி நடிப்பில் அறிமுக இயக்குனர் பெரோஸ் இயக்கிய இப்படத்தை தனது டீ டைம் டாக்கீஸ் சார்பில் நடிகை விஜயலட்சுமி தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தை ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிட்டு இருக்கிறார். இருமுகன், தேவி, சைத்தான், ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து ஆரா சினிமாஸ், வெற்றி பயணத்தில் இன்னொரு மகுடமாக சேர்ந்திருக்கிறது இந்தப் ‘பண்டிகை’ திரைப்படம்.

Related Posts
1 of 8

“திரையுலகம் தற்போது மிகவும் சவாலான சோதனைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ‘பண்டிகை’ படத்தின் வெற்றி எங்களுக்கு ஒரு ஒளிக்கீற்றாக வந்திருக்கிறது.
இதுவரை கண்டிராத ஒரு கதைகளத்தில் மிக அருமையாக கதையை சொன்ன விதத்தில் இயக்குனர் பெரோஸ் தமிழ்த்திரை உலகின் மிக சிறந்த எதிர்கால இயக்குனர்களில் ஒருவராக திகழ்வார் என்பதில் ஐயமில்லை.

அவருடைய கடின உழைப்பும், திறமையும் தான் இந்த வெற்றிக்கு அடித்தளம்.225 காட்சிகளுடன் ஆரம்பித்தோம். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாக இப்போது காட்சிகள் கூட இருக்கிறது. இந்த வெற்றியை ரசிகர்களின் நாடி துடிப்பை உள்ளங்கை நெல்லிக்கனியாய் அறிந்து வைத்து இருக்கும் இன்றைய இளம் இயக்குனர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

எங்களது நிறுவனமான ஆரா சினிமாஸ் தமிழ்த்திரை உலகம் பெருமை கொள்ளும் தரமான படங்களை தொடர்ந்து வழங்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்” என்கிறார் ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ்.