சொன்ன பட்ஜெட்டில் ஷூட்டிங் ஓவர்! – அறிமுகப் படத்திலேயே அசத்திய டைரக்டர்

Get real time updates directly on you device, subscribe now.

‘இருமுகன்’, ‘தேவி’ உட்பட பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்த ஆரா சினிமாஸ் நிறுவனம் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற படத்தின் மூலம் தயாரிப்புத் துறையில் களமிறங்கியிருக்கிறது.

‘ராஜதந்திரம்’ படத்தில் நடித்த வீரா இப்படத்தில் ஹீரோவாக நடிக்க, அவருடன் ‘குக்கூ’ பட நாயகி மாளவிகா நாயர் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் பசுபதி, ரோபோ ஷங்கர், ‘மொட்ட’ ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டு அரசியல் சூழலை நைய்யாண்டியாக கையாண்டு காமெடி படமாக இயக்கியிருக்கிறாராம் அறிமுக இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன்

Related Posts
1 of 2

சொன்ன தேதியில் படப்பிடிப்பை ஆரம்பித்து, கொடுத்த பட்ஜெட்டில் மார்ச் 17-ம் தேதியோடு படப்பிடிப்பை சென்னையில் நிறைவு செய்திருக்கிறார் அவினாஷ் ஹரிஹரன். அதுதான் ஒரு அறிமுக இயக்குனருக்கு சவாலான வேலை என்கிறார் அவர்.

”ஒரு படத்தை கொடுத்த தேதிகளில், கொடுத்த பட்ஜெட்டில் முடித்து கொடுப்பதே ஒரு இயக்குனரின் முதல் சவாலாகும். இதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். என் மீது பெரிதளவு நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பை அளித்த தயாரிப்பாளர் ஆரா சினிமாஸ் காவியா மகேஷ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இந்த படம் நிச்சயம் ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும் என உறுதியாக கூறுவேன்” என்கிறார் அவினாஷ் ஹரிஹரன் .

அப்போ திட்டமிடப்பட்ட வெற்றின்னு சொல்லுங்க!