ஜீவாவுடன் ஜோடி சேர்ந்த ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே

முதல் படமே இன்னும் ரிலீசாகவில்லை. அதற்குள் அடுத்த தமிழ்ப்படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் அர்ஜூன் ரெட்டி படப்புகழ் ஷாலினி பாண்டே.
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜயராகவேந்திரா தயாரிக்கும் மூன்றாவது படம். ஜீவா 29 (இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை)
இதில் ஜீவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே நடிக்கிறார். படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.
“ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் ஜானரில் இந்த ‘ஜீவா 29’ திரைப்படம் தயாராகி வருகிறது. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.
இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் ஒன்றும் இடம்பெறுகிறது. படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்குகிறது” என்று படத்தைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் டான் சாண்டி.
தமிழில் ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் ஜானர் புதுசு என்பதால் இப்படத்திற்கு இப்போதே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.