அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? – டிச.31ம் தேதி அறிவிக்கிறார் ரஜினி!

Get real time updates directly on you device, subscribe now.

மிழக அரசியலில் ஏற்பட்டிருக்கிற வெற்றிடத்தை கமல், விஷால் என்று திரையுலகினர் ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு நிரப்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது தான் அவரது தீவிர ரசிகர்களின் பல ஆண்டுகள் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்த ரஜினி போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.

அதைத்தொடந்து இன்று இரண்டாம் கட்டமாக தனது ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த நிலைப்பாட்டை வரும் டிச-30ம் தேதி அறிவிப்பதாக தடாலடியாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது, ”ரசிகர்களை சந்திக்கும் நல்ல நேரம் இது. சந்திப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.
அவர்களைப் பார்த்தவுடன் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது,

Related Posts
1 of 64

நான் அரசியலுக்கு வருவேனா இல்லையாங்கிறதுல மக்களுக்கு ஆர்வம் இருக்கோ இல்லையோ ஊடகங்களுக்கு ரொம்ப ஆர்வம் இருக்கு. நான் அப்பவே சொல்லியிருக்கேன் போர் வரும் போது பார்க்கலாம்னு. போர்ன்னு சொன்னா தேர்தல் தான். அரசியலுக்கு நான் புதுசு இல்லை.

96-லிருந்தே அரசியலுக்கு வந்ததுனால அதுல இருக்கிற ஆழம் என்ன? கஷ்டம், நஷ்டம் என்னன்னு எல்லாம் தெரிஞ்சிருக்கேன். அப்படித் தெரிஞ்சதுனால தான் தான் தயங்குகிறேன். தெரியலேன்னு சொன்னா ஓகேன்னு சொல்லி வந்திருப்பேன்.

யுத்தத்துக்குப் போனா ஜெயிக்கணும். ஜெயிக்கிறதுக்கு வீரம் மட்டும் பத்தாது, வியூகம் வேணும். என்னை அவங்க இழுக்குறாங்க, இவங்க இழுக்குறாங்கன்னு சொல்றாங்க.

நான் வருகிற டிசம்பர் 31-ம் தேதி என்னோட அரசியல் நிலைப்பாட்டைப் பற்றித் தெரிவிப்பேன்.

நான் அரசியலுக்கு வருவேன்னு சொல்லல. 31-ம் தேதி நான் என்ன முடிவு எடுக்கப் போறேங்கிறதைச் சொல்லப் போறேன் என்றார் ரஜினி.

ரஜினியின் இந்த அரசியல் எண்ட்ரி குறித்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழக மக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.