மாஸ் ஹீரோவாக சீறப்போகும் ஜீவா!
மாஸ் ஹீரோ ஆவது தான் எல்லா ஹீரோக்களின் ஆசையுமாக இருக்கும். அப்படிப்பட்ட கதை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. ஆனால் ஜீவாவுக்கு அமைந்திருக்கிறது.
ஆமாம், விஜய் சேதுபதியை வைத்து ரெக்க படத்தை இயக்கிய ரத்னசிவா இயக்கத்தில் அடுத்து தயாராகி வரும் படம் சீறு. இந்தப்படம் ஜீவாவை மாஸ் ஹீரோவாக அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்கிறது படக்குழு.
ஜீவாவுக்கு இணையாக புதுமுகம் ரியா சுமன் நடிக்க, நவதீப் வில்லனாக நடிக்கிறார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில், கே சம்பத் திலக் கலை வண்ணத்தில், கே கணேஷ் குமார் சண்டை காட்சி அமைக்க, ராஜு சுந்தரம் நடனம் அமைக்க, விவேகா பாடல்களை எழுதுகிறார்.
இந்த ஆண்டின் முக்கியமான படமாக எதிர்பார்க்கப்படும் இந்தப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.