அசினுக்கு இன்று திருமணம் : ஏ.ஆர்.முருகதாஸுக்கு அழைப்பில்லை!!!

Get real time updates directly on you device, subscribe now.

Asin4

அசினின் சினிமா கேரியர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளோடு சுருங்கி விடும் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் ஏ.ஆர்.முருகதாஸின் புண்ணியத்தில் பாலிவுட் போகும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் தான் எடுத்த ‘கஜினி’ படத்தை ஹிந்தியில் இயக்கப் போன ஏ.ஆர்.முருகதாஸ் அந்த வெர்ஷனிலும் அசினையே ஹீரோயினாக நடிக்க வைத்தார்.

படமும் பெரிய அளவில் ஹிட்டானதால் தொடர்ந்து அசினுக்கு ஹிந்திப்பட வாய்ப்புகள் வரவும், மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு மும்பைக்கே சென்று விட்டார்.

தொடர்ந்து லண்டன் ட்ரீம்ஸ், ரெடி என சில பட வாய்ப்புகள் அமைந்தது, அதோடு, எதிர்பாராத விதமாக மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல் சர்மாவின் காதல் வலையில் விழுந்தார்.

Related Posts
1 of 9

அக்‌ஷய்குமார் நண்பரான ராகுல் சர்மா அடிக்கடி அவரை பார்க்க வருகிற சாக்கில் அசினுடன் நெருக்கமானார். நாளடையில் அந்த நட்பு காதலாக இன்று இருவீட்டாரின் சம்மதத்தோடு டெல்லியில் திருமணம் நடந்தது.

அசின் கிறிஸ்தவர் என்பதால் கிறிஸ்துவ முறைப்படி இன்று காலை சர்ச்சில் நடந்தது. ராகுல் சர்மா ஹிந்து என்பதால் இன்றுமாலை டெல்லி காந்தி ஏர்போர்ட் அருகில் இருக்கும் ஒரு ஆடம்பர ஹோட்டலில் ஹிந்துமுறைப்படி  திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்துக்கு தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் சுமார் 50 பேர்வரை அழைத்திருக்கும் அசினின் லிஸ்ட்டில் அவரை இங்கிருந்து ஹிந்திக்கு கூட்டிச்சென்ற டைரக்டர் ஏ.ஆ.ர்.முருகதாஸின் பெயர் இல்லையாம்.

ஆமாம், அசின் திருமணத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் சென்றிருப்பதாக எந்த உறுதியான செய்தியும் இதுவரை இல்லை. இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸும் எந்த கருத்தும் கூறவில்லை.

வருகிற 23- ம் தேதி திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. அதற்காகவாவது ஏற்றி விட்ட ஏ.ஆர்.முருகதாஸுக்கு இன்வைட் அனுப்புவாரா? இல்லையா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

செய் நன்றியை மறக்கிறது எந்த மாதிரி டிசைன்னு தெரியல…?