விஜய் எண்ட்ரி ரெடி! – மிரட்டலாகத் தயாராகும் ‘தளபதி 62’
‘மெர்சல்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்துக்கு தளபதி 62 என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். சமீபத்தில் பூஜையோடு ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் விஜய் கிளாப் போர்டு அடித்து ஆரம்பித்து வைத்தார்.
முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யின் சில காட்சிகளையும், பாடல் காட்சியையும் படமாக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது அந்த பாடல் காட்சி முடிந்து விட்டதாகவும், அது, விஜய்யின் அறிமுகப் பாடல் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, கொல்கத்தாவில் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. கிட்டத்தட்ட 20 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்க இருக்கும் அங்கு விஜய்யின் ஆக்ஷன் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.
மொத்தத்தில் மிரட்டலான காட்சிகளுடன் தயாராகும் ‘தளபதி 62’ விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ரிலீசாக உள்ளது.