டூயட்டே இல்லாம ஒரு படமா? – தெறித்து ஓடிய ஹீரோயின்கள்; ஓ.கே சொன்ன நந்திதா!
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் பார்க்கப் போகிற சில படங்கள் நம்மை புருவம் உயர்த்த வைத்து விடும்.
அப்படி ஒரு படமாக பாபி சிம்ஹா நடிப்பில் 215-ம் ஆம் ஆண்டில் வெளியான ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற படத்தை கொடுத்தவர் இயக்குனர் மருது பாண்டியன்.
அந்தப் படத்துக்குப் பிறகு சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டாவது படத்தில் சசிகுமாருடன் இணைந்திருக்கிறார்.
‘அசுர வதம்’ என்று டைட்டிலோடு தயாராகியிருக்கும் இப்படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப்பட வாய்ப்பு ’96’ பட இயக்குனர் மூலமாகத்தான் மருது பாண்டியனுக்கு கிடைத்ததாம்…
ஆமாம், ’96’ படத்தின் இயக்குனர் பிரேம் தான் சசிகுமாரை சந்தித்து இந்தப் படத்தின் கதையைச் சொல்ல உதவியாக இருந்தார். ‘சுப்ரமணியபுரம்’ மாதிரி படம் எடுத்த இயக்குனரை நான் இயக்கப் போகிறேன் என்று பயமாக இருந்தது. அவர் கொடுத்த ஊக்கத்தால் படத்தை சிறப்பாக எடுத்து முடித்திருக்கிறோம்.
சசிகுமாருக்கு அடுத்து படத்தில் கதிர், கோவிந்த் என இன்னும் இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள். படத்தில் சொல்லப்பட்ட விஷயத்தை நீங்கள் உணர்வீர்கள் என்றார் இயக்குனர் மருதுபாண்டியன்.
பின்னர் பேசிய சசிகுமார் ”கதையை கேட்டவுடன் எனக்குப் பிடித்து விட்டது. நான் தான் இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது. அந்த நேரத்தில் தான் லலித் சார் நான் உங்களை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படுகிறேன் என்றார். நானும் அந்த நேரத்தில் கொஞ்சம் சிரமத்தில் இருந்ததால் எல்லாம் தயாராக இருந்த இந்த படத்தை அவரை தயாரிக்கச் சொன்னேன். நான் சொன்னதும் கதையைக் கூட கேட்காமல் தயாரிக்க முன் வந்தார்..
கொடைக்கானலில் மிகுந்த குளிரில் மொத்த குழுவும் கஷ்டத்தை பொருட்படுத்தாமல் உழைத்தார்கள். தயாரிப்பாளர் லலித், உங்கள் மீது நம்பிக்கை இருக்கு, நீங்கள் நினைத்ததை படமாக எடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார், அதுவே பெரிய பயமாக இருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தை பார்த்த அவர், எங்கள் பேனருக்கு முதல் படமே சிறந்த படமாக கொடுத்திருக்கிறீர்கள் என்று சொன்னபோது தான் மகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் நாயகிக்கு நடிக்க வருமா என்று பார்த்து தேர்ந்தெடுங்கள் என்று சொன்னேன்.
நாயகி கேரக்டர் திருமணம் ஆனவர், அவருக்கு டூயட் இல்லை போன்ற காரணங்களால் நிறைய பேர் நடிக்க முன் வரவில்லை. ஆனாலும் கதையை உணர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டார் நந்திதா.
வில்லன் கதாபாத்திரம் மிகவும் பவர்ஃபுல்லான ஒன்று. இந்த கதாபாத்திரத்தில் யாரும் நடிக்க மாட்டார்கள், ஆனால் வசுமித்ரா ஒரு எழுத்தாளர் என்பதால் அவரிடம் கதாபாத்திரத்தை பற்றி எடுத்து சொல்லி நடிக்க ஒப்புக் கொள்ள வைத்தேன். இது நல்லவன், கெட்டவன் பற்றிய படம், இந்த காலகட்டத்துக்கு தேவையான ஒரு சமூக கருத்துகளை கொண்ட ஒரு கதை” என்றார்.