நயன்தாரா செண்டிமெண்ட்டை காசாக்கப் போகும் தயாரிப்பாளர்!
தமிழில் இன்றைய தேதியில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நயன்தாரா.
இதற்காகவே அவரை தங்கள் படங்களில் தனக்கு ஜோடியாக்க முன்னணி நடிகர்கள் பலரும் போட்டி போடுகிறார்கள்.
இப்படி நயனுக்கு தமிழில் நல்ல மார்க்கெட் இருப்பதால் தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக நயன்தாரா நடித்த ‘பாகு பங்காராம்’ படம் வரும் ஆகஸ்ட் 12 ம் தேதி 350 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை அதே தேதியில் தமிழில் ‘செல்வி’ என்ற பெயரில் ரிலீஸ் செய்கிறார் பத்ரகாளி பிலிம்ஸ் சார்பில் பத்ரகாளி பிரசாத்.
பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.
படத்தில் போலீஸ் உயர் அதிகாரி வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றும் ஜெயபிரகாஷ், சம்பத், சௌகார் ஜானகி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
தெலுங்கில் 20 படங்களுக்கு மேல் இயக்கி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் மாருதி இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தை வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர் – ARK.ராஜராஜா.
படத்தைப் பற்றி ARK.ராஜராஜாவிடம் கேட்டோம்…
வெங்கடேஷ் – நயன்தாரா ஏற்கனவே ‘லஷ்மி’ என்ற படத்தில் நடித்து அந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது. அப்படி ஒரு வெற்றியை ஆக்ஷன், காமெடி, பேமிலி கதையாக வரும் ‘செல்வி’யும் பெறும் என்றார்.
‘செல்வி’ என்று டைட்டில் வைக்கக் காரணம் என்று தயாரிப்பாளரிடம் கேட்டபோது ”தமிழில் நயன்தாராவுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி வசூலை அள்ளுவதற்காகவே இந்தப் படத்துக்கு ‘செல்வி’ என்று பெயர் வைத்தோம் என்றார்.
செம ஐடியா!