‘பாகுபலி 2’ ரெடி : ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளிலும் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப்பெற்று வசூலில் மாஸ் ஹிட்டான படம் பாகுபலி.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தயாராகப் போகிறது என்கிற செய்தி வெளியாகவும் அந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அடங்கியபாடில்லை.
பாகுபலி கட்டப்பாவை ஏன் கொன்றார்? அனுஷ்கா ஏன் இரும்புச் சங்கிலியால் கட்டிப்போடப்பட்டிருக்கிறார்? போன்ற கேள்விகளுக்கு இரண்டாம் பாகத்தில் விடை கிடைக்கும் என்பது தான் எதிர்பார்ப்புக்கு மிக முக்கிய காரணம்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் பாகுபலியின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்கிற கேள்வி இருந்த நிலையில் ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தியாக படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.
ஆமாம் “பாகுபலி தி கன்க்ளூஷன்” என்ற பெயரில் ரிலீசாகப்போகும் பாகுபலியின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு 2017 ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கூடவே படத்துக்கான அனிமேஷன், வீடியோ எபெக்ட்ஸ் வேலைகளும் நடந்து வருகிறது.
பாகுபலி முதல் பாகத்தை தமிழில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டு வசூலை அள்ளியது. அதேபோல இந்த இரண்டாம் பாகத்தின் தமிழ் உரிமையையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமே சுமார் 45 கோடிக்கு வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.