‘பாகுபலி 3’யில் சத்யராஜ் இல்லையாம்! : இப்போ சந்தோஷமா ’சமையல் மாஸ்டர்’ சுரேஷ்?

Get real time updates directly on you device, subscribe now.

shatyaraj1

பிரம்மாண்டத்துக்குப் பேர் போன ஷங்கரையே ஒரு நிமிஷம் மிரள வைத்து விட்டது எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தின் ரிலீசான பாகுபலி.

இதற்காகவே சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அவர் இயக்கத் தயாராகி வரும் எந்திரன் 2 ப்வை பாகுபலியையும் மிஞ்சும் வண்ணம் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டு வருகிறார்.

படம் மட்டும் பிரம்மாண்டமல்ல, அதன் வசூலும் உலக அளவில் பிரம்மாண்டமான வசூலாகி விட்டதால் இன்றும் கூட அந்தப்படத்தைப் பற்றி சிலாகிக்காதவர்களே இல்லை.

அந்தளவுக்கு ரசிகர்களை வெகுவாக ஈர்த்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார் ராஜமெளலி.

Related Posts
1 of 4

அதோடு இந்த இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர், நடிகைகளும் இருக்கிறார்கள். ஆனால் அடுத்து எடுக்கப்போவதாக அறிவித்திருக்கும் பாகுபலியின் மூன்றாம் பாகத்தில் சத்யராஜ், ராணா, பிரபாஸ் என மூவரும் இல்லை என்கிற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

ரசிகர்களுக்கு இந்தத் தகவல் அதிர்ச்சி தருவதாக இருந்தாலும் சத்யராஜ் இல்லாதது விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக குப்பைக் கொட்டி வரும் நடிகர் சுரேஷுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும்.

ஏனென்றால் அவர்தான் பாகுபலி முதல்பாகம் ரிலீசின் போது ராஜமவுலியின் `பாகுபலி` படத்துக்கு எனது ஆதரவு இல்லை. ஏனெனில் எத்தனையோ நல்ல தெலுங்கு குணச்சித்திர நடிகர்கள் இருக்க, தமிழ் நடிகர்களான நாசரையும் சத்தியராஜையும் நடிக்க வைக்க வேண்டிய அவசியமென்ன?” என்று சர்ச்சையைக் கிளப்பினார்.

பிறகு அவர் பிரபாஸ், ராணா ரசிகர்களிடமும் வாங்கியும் கட்டிக் கொண்டார்.