‘இது நம்ம ஆளு’ சூப்பர் சேல் : ‘ஷாக்’கான சிம்பு ஃபேமிலி?

‘பீப்’ பாடல் சர்ச்சையில் சிக்கியிருக்கும் சிம்புவுக்கு போலீஸ், கைது, ஜெயில் என அடுத்தடுத்த நெருக்கடிகள் அதிகரித்தாலும் கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது.
படம் முழுமையாக தயாராகி ஒரு வருடமாகியும் அவருடைய சொந்தப்படமான ‘இது நம்ம ஆளு’ படம் ரிலீசாகாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.
சிம்பு படமா? வேணவே வேணாம் என்று பலரும் தெறித்து ஓடினர். இதனால் தமிழ்நாடு முழுவதும் படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்து விடலாம் என்று திட்டமிட்டிருந்தார் டி.ஆர்.
ஆனால் சமீபத்தில் லீக்கான பீப் பாடலால் ரசிகர்கள் மத்தியிலும் சிம்புவுக்கு மவுசு கூடி விட்டதாம். இதனால் இது நம்ம ஆளு படம் இதுவரை இல்லாத அளவுக்கு 60 கோடி வரை வியாபாரம் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இதை ட்ரெண்ட்டிங்கில் கொண்டு வந்த அவரது ரசிகர்கள் கொண்டாட, அப்படியா எங்க படம் அவ்ளோ சேல் ஆயிருக்கா? என்னை தங்களை தானே கேட்டுக்கொள்கிறதாம் சிம்பு ஃபேமிலி.
”வியாபாரம் ஆனது உண்மை தான். ஆனா 60 கோடியெல்லாம் சான்ஸே இல்லை. நீங்களா எதையும் கெளப்பி விட்டு, தேடி வர்ற எக்ஸ்ட்ரா பிஸினசையும் கெடுத்து விட்றாதிங்க…” என்று செய்தியைப் பரப்பி விடும் ரசிகர்களைப் பார்த்து அலறுகிறார்கள்.
அது சரி வெள்ள உதவிகளே செய்யாத ஹீரோக்களை செஞ்சாங்கன்னு சொல்லி கொண்டாடின கூட்டம் தானே இந்த ரசிகர்கள் கூட்டம்!