‘2.0’ பர்ஸ்ட் லுக் விழாவுக்கு இவ்ளோ செலவா? : ஒரு திரைப்படமே எடுக்கலாமாம்!

Get real time updates directly on you device, subscribe now.

2-0

ங்கர் இயக்கிய படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ தான். சன் பிக்சர்ஸ் தயாரித்த அந்தப்படம் செய்த செலவைத் தாண்டியும் நல்ல லாபத்தைக் கொடுத்ததால் அதன் இரண்டாம் பாகம் வந்தால் கண்டிப்பாக ஹிட்டாகும் என்பது ரசிகர்களின் கணிப்பு.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் எக்ஸ்ட்ரா செலவு செய்தால் தான் முந்தைய பிரம்மாண்டத்தை உடைக்க முடியும். அந்த பிரம்மாண்டத்துக்கு ஷங்கரிடம் கை கோர்த்தது கொண்டு இதோ தயாராகியிருக்கிறது எந்திரனின் இரண்டாம் பாகமான ‘2.0’.

தனது உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் அதே துடிப்புடன் இப்படத்தில் ரஜினி நடித்திருப்பதால் படம் எப்படியிருக்குமோ? என்கிற உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உலகமே காத்துக் கொண்டிருக்க நேற்று முன்தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக மாறியது.

Related Posts
1 of 78

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் ரிலீசாகப்போகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விழா இதுவரை வந்த ஷங்கர் படங்களில் நடந்திராத அளவுக்கு மிகப்பிரம்மாண்டமாக நடக்கிறது!

வருகிற நவம்பர் 20ம் தேதி மும்பையில் யாஸ்ராஜ் ஸ்டூடியோவில் மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கும் இந்த விழாவுக்கு கோடிகளை கொட்டி இறைக்கிறதாம் லைகா புரொடக்‌ஷன்ஸ்.

ஆமாம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டைரக்டர் ஷங்கர், தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் என படத்தில் பணியாற்றும் அத்தனை பேரும் கலந்து கொள்ளும் இவ்விழாவுக்கு சுமார் 6 கோடி ரூபாயை செலவு செய்து பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த பட்ஜெட்டில் தமிழில் ‘காக்கா முட்டை’ மணிகண்டன் போன்ற இயக்குநர்கள் கேரண்டி ஹீரோவை வைத்து ஒரு திரைப்படத்தையே தயாரித்து விடுவார்கள். அப்படிப்பட்ட பட்ஜெட்டை படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸருக்கே செலவு செய்கிறார்கள் என்றால் இன்னும், ட்ரெய்லர், ஆடியோ ரிலீஸ் போன்ற விழாக்களுக்கு எவ்வளவு செவு செய்வார்கள் என்று மொத்த தமிழ்த் திரையுலகமும் வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறது.