லட்சக்கணக்கில் சம்பளமாம்! – ‘பசையுள்ள’ நடிகருடன் ஜோடி சேர்ந்த ‘பிக் பாஸ்’ ஜூலி

Get real time updates directly on you device, subscribe now.

ட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ‘ஜல்லிக்கட்டு’க்கு ஆதரவான போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜூலி என்கிற ஜூலியானா.

பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் தன்னுடைய தவறான நடவடிக்கைகள் மூலமாக பிரபலமானார்.

இதனையடுத்து கலைஞர் டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக வேலை பார்த்தார்.

Related Posts
1 of 3

இந்நிலையில் தற்போது ஜூலி ‘K7 புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் ‘ஜூலியும் 4 பேரும்’, ‘தப்பாட்டம்’ போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு, “இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்த படம் என் வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்” என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

என்ன தான் ஜூலியின் கருத்து இப்படியிருந்தாலும் உண்மையில் அவருக்கு இந்தப் படத்தில் அவர் கேட்ட சம்பளம் லட்சங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில ஆயிரங்களை மட்டுமே பார்த்து வந்த ஜூலிக்கு லட்சங்களில் சம்பளம் என்றதும் ஹீரோ யார் என்பதையெல்லாம் பார்க்காமல் உடனே நடிக்க சம்மதம் சொல்லி விட்டார் என்பதே உண்மையாம்.

இந்த படத்தின் டைட்டில், இயக்குனர் போன்ற விவரங்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.