பொங்கல் வரட்டும் : பலத்தைக் காட்டுவாராம் சிம்பு!

Get real time updates directly on you device, subscribe now.

simbu1

டிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தோற்றுப் போனதில் அவரை விட சிம்பு தான் அதிகம் வருத்தப்பட்டிருப்பார்.

தேர்தல் நேரத்தில் ராதிகா ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஷாலை ‘அவன்’, ‘இவன்’ என்று ஏக வசனத்தில் ஆவேசத்தோடு பேசியவர் அதே மேடையில் ”நான் அறிமுகப்படுத்தின சந்தானமே, மச்சான் நான் பாண்டவர் அணிக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டாப்ல” என்று வெளிப்படையாகவே வருத்தப்பட்டார்.

அவர் எதிர்பார்த்த ரிசல்ட் வரவில்லை என்றதும் நொந்து போனவர் இப்போது தனது பட வேலைகளில் பிஸியாகியிருக்கிறார்.

Related Posts
1 of 96

இதனால் தனது பலத்தை படம் மூலம் விஷாலுக்கு காட்ட முடிவு செய்திருக்கிறாராம் சிம்பு.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘கதகளி’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகப் போகிறது. ஆகையால் தனது ‘இது நம்ம ஆளு’ படத்தையும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்து விஷாலுக்கு தனது ரசிகர்கள் பலத்தைக் காட்ட திட்டமிட்டிருக்கிறாராம்.

இதற்கான அறிவிப்பை கடந்த இரண்டு நாட்களாக ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஆடியோ டிசம்பரில் ரிலீசாகும், படம் 2016 பொங்கலுக்கு ரிலீசாகும் இப்படிக்கு ‘சிம்பு டீம்’ என்று சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகிறார் சிம்பு.

வம்படியா மல்லுக்கு நிக்குறதுன்னா சிம்புவுக்கு ரொம்பப் பிடிக்கும் போல…