திரை ஜாம்பவான்களுடன் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி-ரன்பீர் கபூர்!

Get real time updates directly on you device, subscribe now.

Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து வழங்க, அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா முக்கிய பாத்திரங்களில் நடிப்பில் இந்தியாவின் பிரமாண்ட படைப்பாக பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா பாகம் 1. மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் 09.09.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தினை தென்னிந்திய மொழிகளில் பிரபல இயக்குநர் ராஜமௌலி வெளியிடுகிறார்.படத்தின் வெளியீட்டை ஒட்டி நடிகர் ரன்பீர்கபூர், நாகர்ஜூனா, ராஜமௌலி ஆகியோர் சென்னையில் பிரமாண்ட விழாவில் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இவ்விழாவினில் ரன்பீர் கபூர் கூறியதாவது..,

Related Posts
1 of 3

பிரமாஸ்திரம் திரைப்படத்தை உங்கள் முன் எடுத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கலாச்சாரத்தை பெரிதும் மதிக்கும் சமூகத்தில் நான் என் திரைப்படத்தை எடுத்து வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த திரைப்படத்தின் மூலக்கதையை இயக்குனர் என்னிடம் 10 வருடத்திற்கு முன் கூறிய போது, அந்த ஐடியா எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. அமிதாப், நாகார்ஜுனன் போன்ற திரை ஜாம்பவான்களுடன் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது. இந்தப்படத்தில் தான் நான் ஆலியாவுடன் பழக ஆரம்பித்தேன் இப்போது கல்யாணம் ஆகிவிட்டது எனக்கு இந்தப்படம் மிக முக்கியமான படம் உங்கள் எல்லோருக்கும் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும்.

#Brahmastra #பிரம்மாஸ்திரா