தமிழ் வேலன் இந்தி தோழன்! அட டி.ஆர் கூட இப்படி பேசமாட்டாரே

Get real time updates directly on you device, subscribe now.

அமைதிக்குப் பெயர் தான் சாந்தி…பி.ஜே.பியினர் பேசுவதெல்லாம் வாந்தி என்ற ரேஞ்சிற்கு சில்லறையை சிதற விட்டு நம்மை பதற வைக்கிறது பாவிப்படை ஸாரி காவிப்படை! “மாட்டுக் கோமியம் குடி கொரோனாவை அடி” என்பதில் இருந்து பி.ஜே.பி முக்கியவான்கள் கக்கிய பொன்மொழிகள் எல்லாம் தரை டிக்கெட் ரேஞ்ச். இதில் புதிதாக சேர்ந்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம். இதோ அவர் எடுத்திருக்கும், இல்லை கொடுத்திருக்கும் ஸ்டேட்மெண்ட்ஸ் தமிழ் எங்கள் வேலன் இந்தி எங்கள் தோழன்

வெளிநாட்டில் மேடையேறி பேசும்போதெல்லாம் மோடி திருக்குறளை வைத்து பேசுவார் எனவே மோடி தமிழ் வளர்ப்பவர் இது போதாதென்று இந்தி மொழி கற்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக தமிழ் எங்கள் வேலன் இந்தி நம்ம தோழன் எனும் வாசகம் பொருந்திய டீ-சர்ட்டை வெளியிட்டு நரேந்திர மோடியின் பிறந்த நாளை கொண்டாடினார் நடிகை காயத்ரி ரகு ராம்.

Related Posts
1 of 2

மேலும் பாரத பிரதமர் மோடி தமிழுக்கு எதிரானவர் அல்ல வெளிநாடு செல்லும் போதெல்லாம் தமிழ் திருக்குறள் சொல்லியே பேச ஆரம்பிப்பார். அதனால் அவர் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் இங்கே உள்ள சில அரசியல் தலைவர்கள் திருக்குறள் தெரியாமலும் தமிழும் தெரியாமலும் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று சாடியுள்ளார்.இப்படியெல்லாம் அவர் பேசியிருப்பதைப் பார்த்தால் என்ன தோணுது மக்களே? என்று பொதுஜனத்திடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் இதுதான்..”இதுக்கு கொரோனாவே பர்வால நைனா”