ஒரு வார வசூல் : 100 கோடி கிளப்பில் சேர்ந்தது வேதாளம்!

Get real time updates directly on you device, subscribe now.

ajith1

ஏதோ ‘போட் கிளப்’பில் வீடு வாங்கிய சந்தோஷம் போல ஆகி விட்டது, மாஸ் ஹீரோக்களின் படங்கள் ‘100 கோடி கிளப்’பில் இடம் பிடிப்பது!

முதல் நாள் வசூலில் ரஜினி, விஜய் படங்களின் முதல் நாள் வசூலை சாதனையையே முறியடித்து விட்டது என்று வேதாளம் படம் பற்றி செய்தி பரவியது.

ஆனால் தயாரிப்பாளரோ அதெல்லாம் உண்மையில்லை, படம் ரிலீசாகி ஒரு வாரம் கழித்து தான் எங்களுக்கே கணக்கு வழக்கெல்லாம் தெரிய வரும். உண்மை அப்படியிருக்கும் போது ஏன் இப்படியெல்லாம் கெளப்பிவிட்டு பீதியைக்கொடுக்கிறார்கள் என்று வெளிப்படையாகவே சொன்னார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.

Related Posts
1 of 32

அந்த வகையில் முதல்நாளில் மட்டும் தமிழகத்தில் 20 கோடி வரை வசூலித்த வேதாளம் தற்போது 8 நாட்களில் 64 கோடிகளை வசூலித்திருக்கிறது. அதுபோக உலக அளவில் 8 நாட்களில் நூறு கோடியை வசூல் செய்திருக்கிறது என்று புதிய செய்தி வெளியாகியிருக்கிறது.

ரஜினி நடித்த பிரம்மாண்டப்படமான ‘எந்திரன்’ படமே 100 கோடியை ஒருவாரத்தில் வசூலிக்கவில்லை. அப்படியிருக்கும் போது வேதாளம் படம் மட்டும் எப்படி ஒரே வாரத்தில் அந்த சாதனையை எட்டியது என்பது தமிழ்த்திரையுலக்த்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இதற்குள் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தான் பதில் சொல்ல வேண்டும்!