குழந்தைகளுக்காக கோடை விடுமுறையில் திரைக்கு வரும் “மொட்ட சிவா கெட்ட சிவா”!

காஞ்சனா-2 வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் “மொட்ட சிவா கெட்ட சிவா”. 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த படத்தின் துவக்க விழாவில் லாரன்ஸ் “கலாமின் காலடி சுவட்டில்” எனும் அமைப்பை உருவாக்கி, காஞ்சனா-2 வின் மூலம் வந்த பணத்தில் ஒரு கோடி ரூபாயை ஏழை குழைந்தைகளின் படிப்பு செலவிற்காக வழங்கினார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் உலகமுழுவதும் வெளியிடுகிறார்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் சாய்ரமணி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நான்கு பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்க பட உள்ளது.
மேலும் இந்த படத்தை குழந்தைகளுக்காக மே மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.