நாலு சுவத்துக்குள்ள என்னமோ நடக்குது? : அட அதுதாங்க ‘தாயம்’

Get real time updates directly on you device, subscribe now.

dhayam

நாலு சுவத்துக்குள்ள என்ன வேணும்னாலும் நடக்கும், அதெல்லாம் நமக்கெதுக்கு என்று கிளம்புகிற ரசிகர்களை அட அங்க நடக்கிறதை நீங்களே பாருங்க என்று படமாக எடுத்து விட்டு வந்திருக்கிறது ஒரு புதிய இளவட்ட திரைப்பட குழு.

‘பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷணல்’ சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்திருக்கும் அந்தப்படம் ‘தாயம்’. பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் பெற்ற அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் மட்டுமல்ல இதில் பணியாற்றியிருக்கும் அத்தனை பேரும் அறிமுக இளசுகள் தான்.

பார்த்திபனுக்கே பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய வெற்றியைக் கொடுத்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் நாயகன் சந்தோஷ் பிரதாப் தான் இப்படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

அதிகம் செலவில்லாம வெறும் 17 நாட்களில் நாலு சுவத்துக்குள்ள அதாவது ஒரு ஒரு அறைக்குள் முழுப்படத்தையும் எடுத்து முடித்திருக்கிறது இந்த டீம்.

படத்தின் இடைவேளைக்கு முந்தைய 5 நிமிடக் காட்சிகளைப் பார்த்தபோது அட இது ஸா, எக்ஸாம்னு ஹாலிவுட் படங்கள் மாதிரியே இருக்கே என்கிற சந்தேகம் பார்க்கிற எல்லோருக்கும் வந்து விடும்.

கண்டிப்பா நீங்க சொன்ன ஹாலிவுட் படங்களோட சாயல் இந்தப்படத்துல இருக்காது. இது முழுக்க முழுக்க ஒரு நேர்காணலை மையமாக கொண்டு தயாரான படம். எதுக்காக அந்த நேர்காணல் நடக்குது. அது எதை நோக்கி நகர்கிறதுங்கிறது தான் எங்களோட தாயம் ” என்கிறார் ஹீரோ சந்தோஷ் பிரதாப்.

படத்தின் ஒவ்வொரு பத்து நிமிஷத்துக்கும் ட்விஸ்ட் இருந்துக்கிட்டே இருக்கும் சீட்டு நுனிக்கு வர்ற அளவுக்கு பல்லை கடிச்சிக்கிட்டு ரசிகர்கள் படத்தை பார்ப்பாங்க, அந்தளவுக்கு படம் ரொம்ப விறுவிறுப்பா வந்திருக்கு என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் படத்தின் தயாரிப்பாளர்.

படத்தில் ஒரு முகமூடி மனிதன் வருகிறார். அந்த கதாபாத்திரத்தின் தோற்றம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ‘ப்ரோஸ்த்தெடிக் மாஸ்க்’ எனப்படும் முகமூடியை அமெரிக்காவில் இருந்து அதிக தொகை கொடுத்து இறக்குமதி செய்து கொடுத்தார்களாம் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் மற்றும் பி.திரு.

படமும் வசூலை அள்ளிக் கொடுக்கட்டும்