டிரோன்ஸ்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

 

ஒரு பருந்துப் பார்வையால் உருவாகும் காதலும், ப்ளாக் ஹோல் ஹவுஸுக்குள் இருந்து வெளிவர வேண்டி நடக்கும் மோதலும் தான் படத்தின் ஒன்லைன்

ஒரு பத்து நாள் எங்காவது தங்கிக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுகிறது நாயகன் டிராவிட், நாயகி அஞ்சலி நாயர், நண்பர் ஒருவர் ஆகிய மூவருக்கும். ப்ளாக் ஹோல் எனும் வீட்டை வடிவமைத்துள்ள குரேஷி இவர்களுக்கு தஞ்சம் கொடுத்து இவர்களை லாக் செய்கிறார். வெளியுலகோடு இவர்களால் தொடர்புகொள்ள ஒரு டிரோன் மட்டுமே இருக்கிறது. அந்த டிரோன் சித்தி இத்னானியை டிராவிட்டுக்கு காட்டுகிறது. அதன்பின் அவர்கள் காதலிக்கிறார்கள். ஆனால் சித்தி இத்னானிக்கு பெரிய பேக்ஸ்டோரி உள்ளது. அது என்ன என்பதும், வீட்டுக்குள் மாட்டியுள்ள மூவரின் நிலை என்ன என்பதும் படத்தின் கதை

டிராவிட் ஹீரோவாக ஓரளவு பாஸ்மார்க் வாங்குகிறார். சித்தி இத்னானி அழகாக இருக்கிறார். ஆனால் அது மட்டுமே போதுமானதாக இல்லை. அஞ்சலி நாயர் நன்றாக நடித்திருக்கிறார். அவரது மேக்கப் படு சொதப்பல். குரேஷி பல இடங்களில் காமெடியை விட கடுப்பையே பரிசளிக்கிறார். தேவதர்ஷினி சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். சினிமாவாலா சதிஷ் ஒகே ரகம்

ஹரி எஸ்.ஆர் இசையில் பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் நல்ல விஷுவலை கொடுக்க முயன்றுள்ளார்

நல்ல மெசேஜை படத்தில் கதையில் வைத்த இயக்குநர் ராகவ் மிர்தாத் திரைக்கதையில் ரொம்பவே சொதப்பிவிட்டார். படத்தில் எந்தக் காட்சியிலும் நமக்கு கனெக்டிங் ஏற்படவே இல்லை. கடைசி இருபது நிமிட படம் மட்டுமே ஆறுதல். அதற்காக முதல் இரண்டு மணி நேரத்தை காவு கொடுக்க முடியுமா?
2.5/5