ஜெயிலர்2- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

நெல்சன் ரஜினி இணைந்து செய்துள்ள ஒரு மாஸ் சம்பவம் ஜெயிலர்2

சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர் வைஸ்சராக இருக்கும் ரஜினிகாந்திற்கு சின்ன குடைச்சலை கொடுக்கிறார் பக்ஸ். அதனால் நமோ நாராயணனிடம் டிரைவராக பயணிக்கிறார் ரஜினி. அவரைத் தொட்டு சிலை கடத்தல் கேங்கிலுள்ள தமிழை நெருங்குகிறார். அவரைத் தொட்டு சுராஜ் வெஞ்சாரமூடுவை நெருங்குகிறார். அவரைத் தொட்டு முடிவில் எஸ்.ஜே சூர்யா, வித்யாபாலன், மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரை நெருங்கும் ரஜினி அவர்களை செய்யும் சம்பவங்கள் படத்தின் கதை

நடிக்க வந்து 51-ஆம் ஆண்டிலும் அதே எனர்ஜி.. அதே ஆரா என ரஜினி எல்லா பிரேமிலும் நம்மை பிரேமம் கொள்ள வைக்கிறார். எஸ்.ஜே சூர்யா நடிப்பு வழக்கம் போல் தூள். சுராஜ் வெஞ்சாரமூடு, வித்யாபாலன், மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரும் சிறப்பு செய்கிறார்கள். யோகிபாபு,நமோ நாராயணன் இருவரின் காமெடியும் படத்தில் பக்காவாக வொர்க் ஆகியுள்ளது. மிருணா, ரம்யா கிருஷ்ணன் இருவரும் எமோஷ்னல் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளனர். கேமியோவில் வரும் எல்லா ஸ்டார்களும் சூப்பர்

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் தனித்துவம் செய்துள்ளார். எவரி ஷாட்ஸ் பிரமாதம். இசைஞர் அனிருத் பழைய சரக்குகளை கூட புதுசாக மாற்றி அள்ளு கிளப்பியுள்ளார்

இயக்குநர் நெல்சனின் எழுத்தில் காமெடி எப்போதுமே தூக்கலாக இருக்கும். ஜெயிலர்2-வில் அது எக்ஸ்ட்ராவாக இருக்கிறது. முதல்பாதி முழுக்க முழுக்க அப்படியொரு ரைட்டிங்! இரண்டாம் பாதியில் சிற்சில இடங்களில் பிசிறு அடித்தாலும் Over all படம் அடிதூள்
3.5/5