துல்கர் சல்மானின் 25-வது படம்!

Get real time updates directly on you device, subscribe now.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான்.

வையாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி ரிது வர்மா.

படத்தின் தலைப்பே இது எந்த மாதிரியான படமாக இருக்கும் என்கிற உண்மையைச் சொன்னாலும் இந்தப் படத்தில் இன்னொரு விசேஷமும் இருக்கிறது. ஆமாம், இது துல்கர் சல்மானின் 25-வது படமாம்.

Related Posts
1 of 136

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் எனக்கு 25-வது படம். ஒரு சுவாரஸ்யமான காதல் கதையான இந்தப்படம் சொல்லும் காதலை ரசிகர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்” என்கிறார் துல்கர்.

தேசிங் பெரியசாமி என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி வரும் இந்தப்படத்தில் ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.