அர்னால்டின் ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்!
அர்னால்ட் நடித்து வெளிநாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ திரைப்படம் இந்தியாவில் வரும் ஜூலை 3 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இப்படத்தை தென்னிந்தியா முழுதும் வெளியிடும் திரு.மகேஷ் கோவிந்தராஜின் ‘Auraa cinemas’ நிறுவனத்திடமிருந்து தமிழக விநியோகஸ்த உரிமையை வாங்கியுள்ளது ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன்’ பிக்சர்ஸ் நிறுவனம்.
‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ படத்தை தமிழகத்தில் வெளியிடுவதைப் பற்றி எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பாளர் மதன் குறிப்பிடுகையில் “ஹாலிவுட் திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அர்னால்டின் ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ படத்தை தமிழகத்தில் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது என்றார்.
அதோடு ‘He is back’ என்ற டெர்மினேட்டர் வசனத்தைக் கூறியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.