Family padam- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

சில நேரம் சின்ன பட்ஜெட்டில் நல்ல படங்கள் வரும். அந்த வகையில் ஒரு படம் இது

படம் இயக்க நினைக்கும், வீட்டின் கடைசி தம்பிக்காக தயாரிபாளராக முடிவெடுக்கிறார்கள் இரு அண்ணன்கள். தம்பி ஏன் படமெடுக்க வந்தார்? என்பதை விட, அவர் எப்படியான படமெடுக்க வந்துள்ளார்? என்பதும், அவர் கதை சொல்லி ஒரு இடத்தில் நொந்து கொண்டதும் படத்தின் இன்ட்ரெஸ்டிங் ஏரியாக்கள்

கதையின் நாயகன் என ஒருவரை மட்டும் இப்படத்தில் குறிப்பிட முடியாது. காரணம் எல்லோருமே கதையின் நாயகர்களாக ஸ்கோர் செய்துள்ளனர். உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா உள்பட சிறு கேரக்டர்கள் கூட வெகு இயல்பாக நடித்துள்ளனர்.

சிறிய பட்ஜெட் படம் என்பது தெரியாத வகையில்,கேமராமேன் தனது அரிதான உழைப்பைக் கொடுத்துள்ளார். பின்னணி இசை இந்தப் படத்திற்கு தேவையான மைலேஜை கொடுத்துள்ளது

வெகு சாதாரண கதைக்குள்ளிருந்து ஒரு நல்ல திரைக்கதையை கண்டெடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இயக்குநர். குட்டிக் குட்டி சர்ப்ரைஸஸ், அழகழகான எமோஷ்சன்ஸ் எல்லாமே படத்தில் அழகாக வெளிப்பட்டுள்ளது. சின்னச் சின்ன செயற்கைத் தனங்கள் எட்டிப்பார்த்தாலும், Overall நல்ல படம் இந்த பேமிலி படம்
3/5