புஷ்பா2- விமர்சனம்
புஷ்பா2- விமர்சனம்
ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பிய புஷ்பா2 எப்படி வந்திருக்கிறது?
முதல்வரோடு அல்லு அர்ஜுனின் மனைவி ராஷ்மிகா மந்தனா ஒரு போட்டோ எடுக்க ஆசைப்படுகிறார். முதல்வரான ஆடுகளம் நரேன், “கடத்தல் காரன் குடும்பத்தோடு எப்படி போட்டோ எடுக்கிறது?” என தவிர்க்கிறார். இதனால் எமோஷ்னலாக அவமானப்படும் ஹீரோ அல்லு அர்ஜுன், அடுத்து எப்படியெல்லாம் அல்லு சில்லு கிளப்புகிறார் என்பதே புஷ்பா2-வின் பரபர திரைக்கதை
அல்லு அர்ஜுன் இந்தப் படத்திலும் ஒரு சோல்டரை இறக்கி தான் வருகிறார். ஆனால் ஆக்சனில் அவர் ஏறி அடித்திருப்பதெல்லாம் வேறந்த ஹீரோவும் செய்ய முடியாத சாகசங்கள். நடிப்பிலும் அடித்துத் துவம்சம் செய்துள்ளார். ராஷ்மிகா மந்தனா திகட்ட திகட்ட கவர்ச்சி மற்றும் நடிப்பைக் கொடுத்துள்ளார். பகத்பாசில் கேரக்டரின் முடிவு சொதப்பலாக அமைந்தாலும், அவர் வரும் காட்சிகள் எல்லாமே Fire தான். ஆடுகளம் நரேன் உள்பட எல்லா நடிகர்களும் கிடைத்த ஷாட்களைச் சரியாக யூஸ் செய்துள்ளனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை. பின்னணி இசை பரவாயில்லை. தேவி ஸ்ரீ பிரசாத் உடன் பின்னணி இசையில் பங்கு போட்டிருக்கிறார் நம்ம சாம் சி.எஸ். சிறப்பு. ஒளிப்பதிவு படத்தின் பெருந்தூணாக அமைந்துள்ளது. வேறலெவல் விஷுவல்ஸ். கேமராவால் படத்தில், பெரிய மேஜிக் நிகழ்த்தப்பட்டுள்ளது. சண்டைக்காட்சிகள் அபாரம்
சுகுமார் இந்தப்படத்தில் லாஜிக் அனைத்தையுமே குப்பையில் போட்டுள்ளார். ஆனால் திரைக்கதையில் ஹை ஸ்பீடை ஏற்றியுள்ளார். மூன்றாகால் மணிநேரம் என்றாலும், படம் எங்குமே தேங்கி நிற்கவில்லை..அந்த வகையில் இந்த இரண்டாம் புஷ்பா ரசிகர்களை படம் பார்த்தே ஆகவேண்டும் என Push பண்ணுகிறது
3/5