எங்களைத்தான் வேலைக்கு வெச்சுக்கணும்; இல்லேன்னா ஸ்டிரைக்! : பெப்ஸி தொழிலாளர்கள் அறிவிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

fefsi1

ம்பளம், பேட்டா உள்ளிட்ட விஷயங்களில் தயாரிப்பாளர் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்ஸிக்கும் கடந்த பல வருடங்களாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதுவரை நடந்த பேச்சு வார்த்தைகளில் எந்த ஒரு சுமூக முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே சமீபத்தில் ஆர்.கே.சுரேஷ் நடித்து வரும் ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் பெப்ஸி தொழிலாளர்களில் சிலர் சம்பள விஷயத்தில் பிரச்சனை செய்ததால் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பிரச்சனை செய்த தொழிலாளர்களைப் பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடந்த அவசரக் கூட்டத்தில் ”இனி தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் பெப்ஸி தொழிலாளர்களை வைத்துத்தான் வேலை செய்ய வேண்டுமென்கிற அவசியமில்லை, யாரை வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம், அதோடு தங்கள் படங்களில் வேலை செய்பவர்களுக்கான சம்பளத்தை தயாரிப்பாளர்களே முடிவும் செய்து கொள்ளலாம்” என்கிற அதிரடி முடிவை அறிவித்தார் விஷால்.

விஷாலின் இந்த துணிச்சலான முடிவுக்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதோடு இந்த முடிவிலிருந்து பின் வாங்கவே கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இந்த அறிவிப்புக்கு பெப்ஸி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த முடிவை மறுபரீசிலனை செய்யும்படி பெப்ஸி அமைப்பு வைத்த வேண்டுகோளை தயாரிப்பாளர் சங்கம் மறுத்து விட்டது. இதையடுத்து இன்றுமாலை ஒன்றுகூடி பேசிய பெப்ஸி அமைப்பு ”திரைப்படத் தொழிலில் பெப்ஸி அமைப்பினரை புறக்கணித்து திரைப்படங்களை தயாரித்தால் முழு வேலை நிறுத்தம் செய்வோம் என்றும், ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி சம்பளம் வழங்கா விட்டால் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாகவும்” அறிவித்திருக்கிறது.

Related Posts
1 of 67

இது தொடர்பாக இன்று மாலை பெப்ஸி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை இதோ :

fefsi1 (2)

fefsi2

fefsi3

fefsi4