”அடக்கி வாசிங்க தம்பி” : ஜி.வி.பிரகாஷை கலாய்த்த ரசிகர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

gvprakash1

சையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக கமிட்டான முதல் படம் ‘பென்சில்’.

படம் ஆரம்பித்து ஆண்டுகள் பல ஆகி விட்டது. இன்னும் முனையை சீவிக்கொண்டே இருக்கிறார்கள். பைனான்ஸ் சிக்கலில் படம்தான் ரிலீசானபாடில்லை.

அதற்குள் டார்லிங்க, த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட்டுகளை கொடுத்து பிஸியான ஹீரோ ஆகி விட்டவருக்கு த்ரிஷா இல்லேன்னா நயன் தாரா படம் கெட்ட பையன் பெயரை பெற்றுத்தந்ததால் தன் மீது விழுந்திருக்கும் அந்தக் கலரை மாற்ற ஆக்‌ஷன், காமெடி என ட்ராக்கை மாற்ற ஆரம்பித்திருக்கிறார்.

Related Posts
1 of 7

அவரின் அந்த வேகமான மாற்றத்தைத்தான் செமையாக கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

சில தினங்களுக்கு முன்பு அவர் ஹீரோவாக நடிக்கும் புரூஸ்லி பட போஸ்டர் வெளியானது. அதில் கைகளில் இரண்டு துப்பாக்கியை வைத்துக் கொண்டு மாஸ் ஹீரோ போல போஸ் கொடுக்க என்னப்பா ஜி.வி நாலு படம் கூட ரிலீஸ் ஆகல, அதுக்குள்ளவா இப்படி கெளம்பிட்ட..? என்று சமூகவலைத்தளங்களில் ஆளாளுக்கு கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.ரசிகர்களின் அந்த கலாய்த்தல் கமெண்ட்டுகளுக்கு எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அமைதியாகி விட்டார்.

சோறு போடுறதே அவங்க தான். அவங்களைப் போய் பகைச்சுக்க முடியுமா..?