இளம் ஹீரோயின்களுக்கு ஏங்கும் பார்த்திபன்!

Get real time updates directly on you device, subscribe now.

parthiban1

யதாகி விட்டாலே ஹீரோ என்பதை மறந்து விட்டு அப்பா, அண்ணன், மாமா, சம்பந்தி என மாஜி ஹீரோக்கள் தங்களது ரூட்டை மாற்ற ஆரம்பித்து விடுவார்கள்.

இன்னும் சிலரோ ஹீரோவுக்கு வில்லனாக நடித்து தங்களது இமேஜ் பெரிய அளவில் டேமேஜ் ஆகாமல் பார்த்துக் கொள்வார்கள்.

செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ‘நானும் ரவுடி தான்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வரும் பார்த்திபன் எல்லா படத்திலும் ஜோடியே இல்லாமல் நடிப்பதால் நொந்து போயிருக்கிறாராம்.

Related Posts
1 of 2

சரி மற்ற இயக்குநர்கள் படத்தில் நடித்தால் தானே இப்படியெல்லாம் நடக்கிறது என்று யோசித்தவர் வட்டியும் முதலுமாக சேர்த்து அடுத்து தான் இயக்கி ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒன்றல்ல, ரெண்டல்ல 5 ஹீரோயின்களை தனக்கு ஜோடியாக்கப் போகிறாராம்.

ஐந்தில் எப்படியாவது மூன்று ஹீரோயின்கள் டம்மி கேரக்டர்களாகத்தானே இருப்பார்கள் என்று கேட்டால் இல்லை இல்லை 5 ஹீரோயின்கள் கேரக்டருக்குமே தனித்தனியாக முக்கியத்துவம் இருக்கும் என்கிறார்.

புதுமை விரும்பி நினைத்தால் கண்டிப்பாக செய்வார்.