ரஜினிக்கு கதை சொன்னாரா கௌதம்மேனன்! : வெயிட் அண்ட் ஸீ….
‘லிங்கா’ படத்துக்குப் பிறகு உடனே ஒரு படத்தில் நடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ரஜினி.
அந்த இடைவெளியில் தான் ரஜினியை நேரில் சந்தித்து கதை ஒன்றை சொல்லியிருக்கிறார் ஸ்டைலீஸ் இயக்குநர் கெளதம் மேனன்.
அந்த சமயத்தில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர்களின் லிஸ்டில் கெளதம் மேனன் பெயரும் அடிபட்டது.
கதைப் பிடித்துப் போன ரஜினி கண்டிப்பாக தன்னைத் தான் அடுத்த படத்துக்கு கூப்பிடுவார் என்று எதிர்பார்த்தார் கெளதம்.
ஆனால் இயக்குநர் ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தைப் பார்த்து வியந்து போன ரஜினி இந்த லெவல் ஹிட்டு தான் இப்போதைக்கு தேவை என்று ரஞ்சித்துக்கு அடுத்த பட வாய்ப்பை கொடுத்து விட்டார்.
இருந்தாலும் ரஜினிக்கு பிடித்த இயக்குநர்களில் கெளதமுக்கு இடம் உண்டு. கண்டிப்பாக அவரும் ஒரு படத்தை எதிர்காலத்தில் இயக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
வெயிட் அண்ட் ஸீ….