காஜல் அகர்வாலின் ஹாரர் காமெடி கோஸ்டி

காஜல் அகர்வால் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் ஹாரர் காமெடி படத்திற்கு “கோஸ்டி” என தலைப்பிடப்பட்டுள்ளது. “குலேபகாவலி” ஹிட் படத்தை இயக்கிய இயக்குநர் S.கல்யாண் இப்படத்தினை இயக்குகிறார்.
“கோஸ்டி” திரைப்படம் சென்னை மற்றும் பாண்டிச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் இசை, ட்ரெயலர், வெளியீட்டு தேதி பற்றிய விபரங்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும்