என் மகளை எழுப்பாதீர் – பைம்பொழில் மீரான்

Get real time updates directly on you device, subscribe now.

MEERAN

ன் மகளை எழுப்பாதீர்
அவள் அப்படியே தூங்கட்டும்

உலகம் தன்னை கொல்லும் முன்
அவள் தன்னை கொன்றிருக்கிறாள்
அவளை எழுப்பாதீர்
அவள் அப்படியே தூங்கட்டும்

ப….சிக்கு எதுக்கு படிப்பு?
ப….சிக்கு எதுக்கு டாக்டர் கனவு?
நீதிமன்றம் கேட்கும் முன்
நீண்ட தூக்கம் கொண்டிருக்கிறாள்
அவளை எழுப்பாதீர்
அவள் அப்படியே தூங்கட்டும்

மருத்துவ படிப்பு கிடைத்தாலும்
மருத்துவராய் மாறினாலும்
ஜாதி அடையாளம் அவளை
துரத்தி துரத்தி கொன்றிருக்கும்
அதனால் அவள் இப்போதே செத்துவிட்டாள்
அவளை எழுப்பாதீர்
அவள் அப்படியே தூங்கட்டும்

கோழைகளும், பேடிகளும், ஆளும் நாட்டில்
குடிமகளாய் இருக்க பிடிக்காமல் – அவர்களை
செருப்பால் அடித்துவிட்டு செத்துப்போனவள்
அவளை எழுப்பாதீர்கள் அவள் அப்படியே தூங்கட்டும்.

Related Posts
1 of 2

பணத்தைக் கொண்டும், பிணத்தைக் கொண்டும்
அரசியல் செய்யும் காவிகளே, கரை வேட்டிகளே
வெற்றுக் கூச்சலால் என் மகளை எழுப்பாதீர்கள்
அவள் அப்படியே தூங்கட்டும்.

வீராவேச கூச்சல்கள், வெற்று முழுக்கங்கள்
உடனே கரைந்து விடும் உணர்ச்சி பெருக்குகள்
கணநேரத்தில் மறையும் கண்ணீர்களால்…
அவளை எழுப்பாதீர்கள் அவள் அப்படியே தூங்கட்டும்

ஆண்களின் உதட்டின் மேல் இருப்பதை
மீசை என்று தவறாக புரிந்திருந்தாள்
அது வெறும் மயிர் என்பதை
உணர்ந்து உறங்கி விட்டாள்
அவளை எழுப்பாதீர்
அவள் அப்படியே தூங்கட்டும்.

ஆண்கள் இல்லாத ஒரு தேசத்தில்…
அவள் மட்டும் வாழ்ந்து என் செய்வாள்
அமைதியாக தூங்கட்டும்
அவளை எழுப்பாதீர்கள்

அன்பு அப்பா
-பைம்பொழில் மீரான்