ஆள விடுங்க சாமீ…..! : சிம்பு – தனுஷ் இம்சைகளால் வெறுத்துப் போன கெளதம் மேனன்!

Get real time updates directly on you device, subscribe now.

dhanush

டவுளே படமெடுக்க வந்தாலும் சிம்பு கொடுக்கிற டார்ச்சர்களில் கொஞ்சம் மிரண்டு தான் போவார். இதில் கெளதம் மேனன் எல்லாம் எந்த மூலைக்கு என்றாகி விட்டது.

அவரின் நிலைமை!

சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படப்பிடிப்பை ஆரம்பித்த கெளதம் மேனன் துவங்கிய சில மாதங்கள் எந்த சச்சரவுகளும் இல்லாமல் படமெடுத்தார்.

திடீரென்று தனுஷிடம் கால்ஷூட்டு கிடைக்கவும் அவரையும் வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை ஆரம்பித்தார்.

Related Posts
1 of 67

இதனால் சிம்பு படம் முடிக்கப்படாமல் தொங்கலில் நின்றதால் சிம்பு செம டென்ஷன். இடையில் சிம்புவுக்கு சம்பள பாக்கி பஞ்சாயத்தையும் அப்பா டி.ஆர் இழுத்து விட்டதால்

நொந்து போன கெளதம் மேனன் தனுஷ் படத்தின் படப்பிடிப்பை தொடர நினைத்தார். ஆனால் தனுஷோ தனது ஆஸ்த்தான இயக்குநர் வெற்றிமாறனின் வட சென்னை படப்பிடிப்புக்கு போய் விட்டார்.

இப்படி இரண்டு ஹீரோக்களும் மாறி மாறி கொடுத்த இம்சைகளில் கடுப்பான கெளதம் மேனன் இப்போது மூன்றாவதாக ஜெயம் ரவி, புனித் ராஜ்குமார், பிருத்விராஜ், சாய் தரண் தேஜ் ஆகியோர் நடிக்கும் புதிய படமொன்றை இயக்கப் போய் விட்டாராம்.

இதுவும் எத்தனை நாளைக்கோ..?