குண்டு இசை வெளியீட்டு விழாவில் மாரிசெல்வராஜ் நெகிழ்ச்சி

Get real time updates directly on you device, subscribe now.

பா.ரஞ்சித் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள படம் இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு
இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது,

Related Posts
1 of 13

“நீலம் புரொடக்சன் இதை மாதிரி நிகழ்வுகளை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனை கொண்டுவந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்க வைத்தாரோ..அதேபோல் இரும்பு கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித். தோழர் அதியன் அவர்களின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும்? என்ற ஆசை எனக்குள் இருந்தது. படத்தைப் பற்றி ரஞ்சித் அண்ணன் பேசி இருக்கிறார். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் பேசி இருக்கிறார். இப்படத்தை எதைக்கொண்டு தடுத்தாலும் இப்படம் அடைய வேண்டிய இலக்கை அடைந்தே தீரும்” என்றார்