உலகமே பாகுபலியை கொண்டாடுது : இவரு என்னடான்னா..?
‘பாகுபலி 2′ தான் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும் பாராட்டித் தள்ளும் படமாக இருக்கிறது.
சொல்லப்போனால் ”பாகுபலி” முதல் பாகத்தை விட அதன் இரண்டாம் பாகமான ”பாகுபலி 2”வுக்கு உலகம் முழுக்க உள்ள சினிமா ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். அதன் தாக்கமாக கிட்டத்தட்ட 1700 கோடி வரை வசூல் செய்து பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை முறியடித்திருக்கிறது.
இப்படி உலகமே கொண்டாடும் அந்தப்படத்தை ஒரு குப்பையான படம் என்று கடுமையாகத் தாக்கி கருத்து தெரிவித்திருக்கிறார் மலையாள சினிமா உலகில் சிறந்த படங்களை இயக்கியதற்காக பலமுறை தேசிய விருதுகளையும், மாநில விருதுகள் உள்ளிட்ட பிற விருதுகளையும் பெற்ற பிரபல மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்.
சரி அப்படி என்ன சொன்னார்?
“எல்லோரும் ”பாகுபலி” படம் பற்றியே சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தளவுக்கெல்லாம் அதில் புதிதாக எதுவும் இல்லை. 1951-ம் ஆண்டு வெளியான ”பாதாள பைரவி” போன்ற ஒரு படம் தான் ”பாகுபலி.” இந்தப் படத்தால் இந்திய சினிமா துறைக்கு எந்த பயனும் இல்லை. இந்த மாதிரி படங்களை பார்க்க நான் ரூ.10 கூட செலவு செய்ய மாட்டேன்” என்பது தான் பாகுபலி மீது அடூர் வைத்திருக்கும் மோசமான கமெண்ட்.
உலகமே பாகுபலியை கொண்டாடுது, இவரு என்னடான்னா..?