‘இப்படை வெல்லும்’ படத்துக்கு இலவச விளம்பரம் : பாஜக தலைவர்களை கிண்டலாக அழைத்த உதயநிதி!

Get real time updates directly on you device, subscribe now.

ippadai-vellum

விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. டிஜிட்டல் இந்தியா சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்கள் எதிர்ப்புக் குரல்கள் கொடுத்தனர். அதுவே அப்படத்துக்கு மிகப்பெரிய அளவில் விளம்பரமாக அமைந்து, படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாகி விட்டது.

இப்படி மெர்சலுக்கு எதிராக பாஜகவினர் நடந்து கொண்டது பற்றி கருத்து தெரிவித்த திரையுலகினர் சிலர் ”இனி ரிலீசாகிற எல்லாப் படங்களையும் பி.ஜே.பி தலைவர்கள் எதிர்க்க வேண்டும், அதுவே படங்களுக்கு பப்ளிசிட்டியாக மாறி நல்ல வசூலோடு வெற்றிப் படங்களாக அமைய வேண்டும்” என்று கிண்டலாகப் பேசினர்.

இந்நிலையில், ‘மெர்சல்’ படத்தை எதிர்த்தது போலவே என்னுடைய ‘இப்படை வெல்லும்’ படத்துக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து பப்ளிசிட்டி செய்ய வேண்டும். அதற்காக எச்.ராஜா, தமிழிசை ஆகியோரை என்னுடைய படத்துக்கு எதிராக பேச வைக்கலாம் என்று நினைக்கிறேன்.” என்று சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கிண்டலாகத் தெரிவித்தார் உதயநிதி.

உதயநிதியின் இந்த பேச்சு பி.ஜே.பி தலைவர்களுக்கு எரிச்சலை கிளப்பி விட்டிருக்கிறது. அதோடு உதயநிதியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்” என்று தனது ட்விட்டரில் கமெண்ட் அடித்திருக்கிறார் எச்.ராஜா.

இந்தா பப்ளிசிட்டியை ஆரம்பிச்சிட்டாங்கள்ல…