மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில்! : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

Get real time updates directly on you device, subscribe now.

simbu

சென்ற ஏப்ரல் மாதம் கார்த்தி நடிப்பில் ‘காற்று வெளியிடை’ படத்தை இயக்கித் தயாரித்து வெளியிட்ட இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த பட வேலைகளில் இறங்கி விட்டார்.

வழக்கம் போல தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் இயக்கித் தயாரிக்கும் இப்படம் அந்த நிறுவனத்தின் 17ஆவது தயாரிப்பாகும்.

Related Posts
1 of 71

பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என நான்கு முன்னணி நடிகர்கள் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

படப்பிடிப்பு, எதிர் வரும் 2018 -ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.