‘இளையராஜா 75’ நிகழ்ச்சியில் ரஜினி – கமல்!

Get real time updates directly on you device, subscribe now.

மிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் இசைஞானி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை ‘இளையராஜா 75’ என்ற பெயரில் நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சியின் முன்னோட்டமாக டிக்கெட் விற்பனை தொடக்க விழா செங்கல்பட்டு அருகே உள்ள மஹிந்திரா வேல்டு சிட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், இசையமைப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல்வேறு தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சி குறித்து விஷால் பேசியதாவது, ”சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த மாமேதை இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்திய திரையுலகம் சார்பாக விழா எடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்நிகழ்ச்சி 2019பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது சாதாரணமான நிகழ்ச்சி அல்ல. மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளோம்.

முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பிரபலங்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடவிருக்கிறார்கள். இரண்டாவது நாள் இளையராஜா பாடவிருக்கிறார்.

Related Posts
1 of 79

இந்நிகழ்ச்சி மூலம் இளையராஜாவை பெருமைப்படுத்துவதைத் தாண்டி, அவரால் வரும் நிதியைக் கொண்டு தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். அதேபோல், அவருக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை இசை சங்க அறக்கட்டளைக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கும் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரையும் நேரில் சென்று அழைப்போம். அவர்களும் வருவார்கள் என்று நம்புகிறோம். ரஜினி, கமல் இருவருக்கும் விண்ணப்பம் வைத்திருக்கிறோம். பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகள் திரைப்பட துறையில் இருக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பிற்கு விடுமுறை அறிவித்திருக்கிறோம்.

நிகழ்ச்சி பிப்ரவரி 2ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும். இரண்டு நாட்களும் இதேநேரம் தான் இருக்கும். இதற்கான டிக்கெட் தொகைக்கான ஒப்பந்தம் பற்றி ‘bookmyshow’ – வுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.

ரூ.500 லிருந்து ரூ.25000 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இரண்டு நாட்களுக்கு சீசன் பாஸ்-ம் இருக்கிறது” என்றார்.