சொந்தப்படம் வேண்டாம் – விஜய் ஆண்டனி திடீர் முடிவு

Get real time updates directly on you device, subscribe now.

சில நேரங்களில் சில முடிவுகளை உடனே எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி ஒரு முடிவைத்தான் தற்போது எடுத்திருக்கிறார் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி.

‘நான்’ படத்தில் ஆரம்பித்து ‘காளி’ வரை ஒன்றிரெண்டு படங்களைத் தவிர மீதி அத்தனை படங்களையும் சொந்தமாகவே தயாரித்து நடித்து வந்தார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.

அதில் ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் விஜய் ஆண்டனியின் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான ‘சைத்தான்’, ‘எமன்’, ‘அண்ணாதுரை’, ‘காளி’ ஆகிய படங்கள் அவருக்கு தோல்விப் படங்களாக அமைந்ததோடு மட்டுமில்லாமல், பொருளாதார ரீதியாகவும் மிகப்பெரிய இழப்பைக் கொடுத்தது.

Related Posts
1 of 144

இதனால் அப்செட்டான விஜய் ஆண்டனி அதிரடி முடிவொன்றை எடுத்திருக்கிறார்.

தற்போது நடித்து வரும் ‘திமிரு புடிச்சவன்’, ‘கொலைகாரன்’, ‘திருடன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு சொந்தப்படத் தயாரிப்புக்கு குட்பை சொல்லும் அவர் இனி மற்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்களில் மட்டுமே நடிக்கப் போகிறாராம்.

தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடமும் இந்த விஷயத்தை சொல்லி அனுப்பும் விஜய் ஆண்டனி, தனக்கு நெருங்கியவர்களிடமும் ”நல்ல தயாரிப்பாளர், நல்ல இயக்குனர் இருந்தால் சொல்லுங்கள் நடிக்கலாம்” என்று அன்புக் கட்டளை போடுகிறார்.