மேக்கப்மேனால் நிறுத்தப்பட்ட ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு
இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
படத்தின் படப்பிடிப்பில் கமல் பிஸியாக இருப்பார் என்று பார்த்தால், கடந்த சில தினங்களாக ஊர் ஊராகச் சென்று தன் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்படியானால் இந்தியன் 2 படப்பிடிப்பு என்னாவாயிற்று என்கிற கேள்வி வருமல்லமா? விசாரித்தால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது என்கிறார்கள் யூனிட்டில்.
படத்தில் பழைய இந்தியன் தாத்தோ தோற்றத்தில் வருகிறார் கமல். அதற்காக ஸ்பெஷல் மேக்கப் எல்லாம் போட்டுப் பார்த்ததில் இயக்குனர் ஷங்கருக்கு முழு திருப்தி இல்லை. சொல்லப்போனால் பழைய இந்தியன் தாத்தாவின் தோற்றத்தோடு புதிய இந்தியன் தாத்தாவின் தோற்றம் ஒத்துப்போகவில்லை. இதனால் இன்னொரு புது மேக்கப் மேனை தேட ஆரம்பித்திருக்கிறார் ஷங்கர்.
அதன் விளைவாகத்தான் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு இல்லாததால் தன் கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறாராம் கமல்.