தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் ‘இன்று நேற்று நாளை – 2’
‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை திருகுமரன் எண்டர்டயின்மெண்ட்ஸ் சார்பாக சிவி குமார் தயாரிக்கிறார்.
‘முண்டாசுபட்டி’, மற்றும் ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் துணை – இணை இயக்குனராக பணியாற்றிய எஸ் பி கார்த்திக் இப்படத்தின் இயக்குனராக உயர்ந்திருக்கிறார்.
இப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ஆர். ரவிக்குமார், அதன் இரண்டாம் பாகத்திற்கு கதை, திரைகதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார்.
‘சூது கவ்வும்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘மிஸ்டர். லோக்கல்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். பிற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் செப்டம்பர் மாதத்தில் துவங்கவிருக்கிறது. இப்படத்தை எதிர்வரும் 2020 கோடை விடுமுறை காலத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.