சந்தானம் ஹீரோவாக கலக்கும் ‘இனிமே இப்படித்தான்’
‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சோலோ ஹீரோவாகியிருக்கிறார் ‘காமெடி சூப்பர் ஸ்டார்’ சந்தானம்.
தனது சொந்தப் பட நிறுவனமான ஹேன்ட் மேட் பிலிம்ஸ் சார்பாக அவரே தயாரித்து வரும் இனிமே இப்படித்தான் என்ற புதிய படத்தை முருகானந்த் எழுதி இயக்குகிறார்.
இதில் சந்தானத்துக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி, இன்னொருவர் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா கிஷோர்.
சந்தோஷ் குமார் தயாநிதி இசையமைப்பில் கபிலன், மதன் கார்க்கி, கானா பாலா, டாக்டர் உமா தேவி, கானா வினோத் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டது.
கோடைகால கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளது ‘இனிமே இப்படித்தான்’.