‘ஜாக்’ – இது ஹீரோவோட பெயர் இல்லீங்க.. நாயோட பெயரு…

Get real time updates directly on you device, subscribe now.

ஹீரோக்களிடம் கால்ஷீட் வாங்கி படமெடுப்பதற்குள் இயக்குனர்கள் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. அதனால் தானோ என்னவோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு குரங்கு, மாடு, நாய், பூனை போன்ற விலங்குகளை வைத்து படமெடுக்கும் பார்முலா தமிழ்சினிமாவில் மீண்டும் தொடங்கியிருக்கிறது.

அந்த வகையில் புரூஸ்லீ படத்தை இயக்கிய பிரஷாந்த் பாண்டிராஜ் நாயை மையமாக வைத்து ‘ஜாக்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குகிறார்.

அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘புரூஸ்லீ’, ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் ‘வான்’ படத்தை தயாரிக்கும் கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

ஜாக் என்ற ஸ்டைலீசான டைட்டிலை பார்த்ததும் இது ஹீரோவோட பெயராகத்தான் இருக்கும் என்கிற முடிவுக்கு வந்து விட வேண்டாம். இந்தப் படத்தின் கதை நாயை மையப்படுத்தி எடுக்கப்படுவதால் அதற்கு ஜாக் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதையே படத்தின் டைட்டிலாகவும் வைத்திருக்கிறார்கள்.

Related Posts
1 of 134

“ஜாக் என்ற படத்தின் டைட்டில் உலக அளவில் ரசிகர்களை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது. இந்த கதையை சில காலம் முன்பே எழுதி விட்டேன். இது ராணுவத்துக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு நாயை பற்றிய கதை என்பதால் கதைக்கு நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டது.

வெறும் நாயை வைத்து எடுக்கப்படும் பொழுதுபோக்கு படம் இல்லை, படத்தின் ஆதாரமே எமோஷன் தான். போர்க்காட்சிகளில் நாயகனுக்கும், நாய்க்கும் இடையே உள்ள பிணைப்பு தான் படத்தின் ஒரு முக்கிய ஹைலைட். அசோக் செல்வன் இந்த படத்துக்கு பிறகு நல்ல உயரத்துக்கு போவார்.

நாயகி தேர்வு நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது” என்றார் இயக்குனர் பிரஷாந்த் பாண்டிராஜ்.