‘ஜுங்கா’ வந்தாச்சு… அடுத்து வரப்போகுது ‘ஜாங்கோ’!

Get real time updates directly on you device, subscribe now.

மிழ்சினிமாவிற்கு பல இளம் வெற்றிப்பட இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக “ஜாங்கோ” எனும் புதிய படத்தை தயாரிக்கிறார்.

இன்று இனிதே துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை பாரதிய ஜனதா கட்சி தமிழக இளைஞர் அணி தலைவரும், மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான சதிஷ்குமார் போன்ஸ்லே துவங்கி வைத்தார்.

இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோ கார்த்திகேயன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

சதிஷ் என்ற புதுமுகம் இப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கருணாகரன், ராம்தாஸ், ஆர்.ஜே ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளிசி, சந்தான பாரதி, சிவாஜி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.