மொட்ட சிவா கெட்ட சிவா : டோட்டலா மாத்திட்டார் லாரன்ஸ்!

‘காஞ்சனா 2′ படத்தின் பேய் ஓட்டத்தைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸை வைத்து படமெடுக்க ஆளாளுக்கு முண்டியடித்தனர்.
இறுதியாக இந்தப் போட்டியில் வேந்தர் மூவிஸ் வெற்றி பெற்றது.
ஆமாம், ராகவா லாரன்ஸை வைத்து ‘நாகா’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என இரண்டு பிரம்மாண்டப் படங்களை ஆரம்பித்தனர்.
இப்போது இந்த இரண்டு படங்களில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் தயாரிப்பாளரை அதிரடியாக மாற்றியிருக்கிறார் லாரன்ஸ்.
பல வெற்றிப் படங்களை தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் தான் இந்த “மொட்ட சிவா கெட்ட சிவா” படத்தை ஆரம்பிக்கிறது. அந்த நிறுவனம் தயாரிக்கும் 87 வது படம் இது. படத்தை உலகம் முழுவதும் வேந்தர் மூவீஸ் சார்பில் எஸ்.மதன் தான் வெளியிடுகிறார். தெலுங்கில்
கல்யாண் ராம் நடித்து சூப்பர் ஹிட்டான “பட்டாஸ்’’ படத்தின் ரீமேக் இது. இந்தராகவா லாரன்ஸ் நடிக்க வேந்தர் மூவீஸ் தயாரிக்க இருந்த “மொட்ட சிவா கெட்ட சிவா’’ படத்தின் டைட்டில் “பட்டாஸ்’’ படத்தின் ரீமேக் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மற்றும் இயக்குனர் சாய்ரமணி கேட்டுக் கொண்டனர். ஆகையால் வேந்தர் மூவீஸ் மதன் அவர்கள் இந்த தலைப்பை விட்டுக் கொடுத்து விட்டு தான் தயாரிக்கப் போகும் படத்துக்கு வேறு தலைப்பை வைக்க உள்ளார்.
மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். மற்றும் நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்றும் சதீஷ், தம்பி ராமய்யா, மனோபாலா, கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – சாய்ரமணி . இவர் ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த சிங்கம் புலி படத்தை இயக்கியவர்.
படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18ஆம் தேதி சென்னையில் துவங்கி முப்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் படப்பிடிப்பு ஹைதராபாத், ஹாங்காங், சுவிட்சர்லாந்து போன்ற இடங்களில் அதிக பொருட்செலவில் படமாக்கப்பட உள்ளது.