ஆந்திராவிலும் மவுசு கூடுது! : தெலுங்கு ஹீரோக்களை அதிர வைத்த விஜய்
பக்கா கமர்ஷியல் படங்களின் லிஸ்ட்டை எடுத்தால் விஜய் நடித்த படங்களே பெரும்பாலான இடத்தை நிரப்பி விடும்.
தனது ரசிகர்களுக்கு தேவையான மசாலா அயிட்டங்கள் எல்லாவற்றையும் அதில் இம்மியளவும் வஞ்சனை செய்யாமல் சேர்த்து விடுவார்.
அது தோல்வியா? வெற்றியா? என்பதெல்லாம் அப்புறம் ரூம் போடாமலேயே யோசிக்க வேண்டிய விஷயம்.
அப்படி சேர்த்த படங்களில் விஜய்யின் ‘ஜில்லா’வும் ஒன்று.
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் சென்ற ஆண்டு ரிலீசான ஜில்லா படத்தை நேற்று தான் ஆந்திராவில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
பொதுவாகவே தமிழ் படங்களின் டப்பிங் படங்களுக்கு எப்பவுமே வெளிமாநிலங்களில் உள்ள தியேட்டர்கள் காற்று வீசிக்கொண்டு தான் இருக்கும் ஆனால் இந்த மரபை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறார் விஜய்.
ஆமாம், சொன்னால் ஆச்சரியப்பட்டு போய் விடுவீர்கள். நேற்று ஆந்திராவில் மூன்று நேரடி தெலுங்கு படங்களும் ஒரே ஒரு டப்பிங் படமான ஜில்லாவும் ரிலீசானது, இதில் அந்த மூன்று தெலுங்கு படங்களுக்கு இல்லாத ஓப்பனிங் விஜய்யின் ஜில்லா படத்துக்கு கிடைத்திருக்கிறது என்கிறது ஆந்திராவிலிருந்து வரும் ஆச்சரியத் தகவல்.
இதனால் உச்சி குளிர்ந்து போன விஜய் டைரக்டர் ஆர்.டி.நேஷனுக்கு போனைப்போட்டு ஸ்பெஷலாக பாராட்டியிருக்கிறார்.
இனி விஜய்யின் ஆட்டம் ஆந்திராவிலும் தொடரும் போலிருக்கிறது!