மீண்டும் காமெடி ரோல் : நட்புக்காக இறங்கி வந்த சந்தானம்!

Get real time updates directly on you device, subscribe now.

santhanam

ந்தானம் இன்றைக்கு ஹீரோவாக நடிக்கிற அளவுக்கு தைரியம் வந்திருக்கிறது என்றால் அவர் பல படங்களில் நடித்த காமெடிக் காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவது தான்.

அதிலும் சந்தானம் கேரியரில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்கள் முக்கிய இடத்தைப் பிடித்தன. இந்த மூன்று படங்களிலும் சந்தானம் ஜீவா, ஆர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து காமெடியில் கலக்கியிருப்பார்.

Related Posts
1 of 10

அப்படி சந்தானம் கேரியருக்கு வலு சேர்த்த இயக்குநர் ராஜேஷ் இறுதியாக எடுத்த படங்கள் பெரிய அளவில் போகவில்லை. இதனால் நொந்து போனவருக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் கடவுள் இருக்கிறான் குமாரு என்ற படத்துக்காக கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.

இதில் ஒரு கெளரவ வேடத்தில் நடிக்க சந்தானம் தேவைப்பட்டார். ஹீரோ ஆன பிறகு மற்ற ஹீரோக்களின் படங்களில் நடிக்கக் கூடாது என்று கொள்கையோடு இருக்கும் சந்தானத்திடம் ராஜேஷ் கேட்டதும் தனது கொள்கையை தளர்த்தி விட்டு கடவுள் இருக்கான் குமாரு படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறாராம் சந்தானம்.

நண்பேன்டா…