கிஸ் அடிப்போம்.. ஹிட்டடிப்போம்… : இறங்கி வந்த காஜல் அகர்வால்
என்னதான் தமிழ், தெலுங்கில் கேட்கிற சம்பளத்தோடு, முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகள் தேடி வந்தாலும் எல்லா நடிகைகளுக்கும் பாலிவுட் என்றாலே தனி ஈர்ப்பு தான்.
அசின், த்ரிஷா, ஸ்ருதிஹாசன் போன்ற முன்னணி நடிகைகள் ஏற்கனவே அங்கு சென்று கிளிக் ஆகாமல் திரும்பி வர, மும்பையை சொந்த மாநிலமாகக் கொண்ட காஜல்அகர்வாலுக்கு சமீபகாலமாக ஹிந்திப் படங்களில் நடிக்கும் ஆசை கொஞ்சமல்ல, ரொம்பவே ஆட்டிப்படைக்கிறதாம்.
‘சிங்கம்’, ‘ஸ்பெஷல் 26’ ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்துப் பார்த்தும் வாய்ப்பு வராததால் கவலையில் இருந்த காஜல் இனிமேலும் பொறுக்க முடியாது என்று கவர்ச்சியாக நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.
சமீபகாலமாக எந்த பொது விழாக்களாக இருந்தாலும் கவர்ச்சியான உடைகளில் வந்து ரசிகர்களை கவரும் காஜல் படங்களில் ஹீரோக்களுக்கு ‘லிப் டூ லிப் கிஸ்’ அடிக்கவும் ஓ.கே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.
ரன்தீப் ஹுடாவுடன் காஜல் நடிக்கும் புதிய ஹிந்திப்படம் ‘டு லஃப்ஸோன் கி கஹானி’. இதில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் அவர் ரன்தீப்புடன் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடித்து மிரட்டியிருக்கிறாராம்.
இப்படி கேரக்டருக்காக எவ்வளவு தூரத்துக்கு இறங்கி வர முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு இறங்க திட்டமிட்டிருக்கிறாராம்.
