தினேஷுக்கு மாமியாராக நடிக்கத் தயங்கிய தேவயானி!

Get real time updates directly on you device, subscribe now.

‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘ராக்காயி கோயில்’, ‘பெரிய கவுண்டர் பொண்ணு’, ‘கட்டபொம்மன்’, ‘நாடோடி மன்னன்’, ‘மாப்பிள்ளை கவுண்டர்’ உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு பிறகு ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தை தயாரிக்கிறது.

தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் காந்தி மணிவாசகம்.

Related Posts
1 of 135

படம் பற்றி அவரிடம் கேட்டபோது… ”என் அப்பா மணிவாசகம் ஒரு பார்முலா வைத்திருப்பார். மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல், நிறைய காமெடி வைத்திருப்பார். அதன் படி அவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்சியலாக வெற்றி பெற்றது. அதைத்தான் நானும் தொட்டிருக்கிறேன்.

பக்கா ஃபேமிலி சப்ஜெக்டுடன் காமெடியை மிக்ஸ் செய்திருக்கிறேன். வழக்கமாக மாமியார் மருமகள் கதைகள் தான் சினிமாவில் வந்திருக்கிறது. ஜெயித்திருக்கிறது. மாமியார் மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும். அமோக வெற்றி பெறும். அப்படித்தான் இது உருவாக்கப் பட்டிருக்கிறது.

தினேஷுக்கு மாமியாராக நடிக்க வேண்டும் என்று தேவயானியிடம் கேட்ட போது தயங்கினார். முழு கதையையும் கேட்ட உடன் ஓ.கே.சொன்னார். அந்தளவுக்கு மாமியார் மருமகள் பிரச்சனையை இதில் கையாண்டிருக்கிறோம். ஜாலியான பொழுதுபோக்கு படமாக களவாணி மாப்பிள்ளை உருவாகி இருக்கிறது. படம் இம்மாதம் வெளியாகிறது” என்றார்.