“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தின் “பைரவா ஆன்தம்”!

Get real time updates directly on you device, subscribe now.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில், பெரும் காத்திருப்பிற்கு பிறகு “கல்கி 2898 கி.பி.” படத்திலிருந்து, தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, “பைரவா ஆன்தம்” பாடலை வெளியிட்டுள்ளனர்.உலகளாவிய பிரபலங்களாக திகழும் பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் இந்தப் பாடல், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கல்கி 2898 கிபி திரைப்படம், திரையுலகின் மாயாஜாலம் எனலாம், இது இந்திய நாட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், காமிக்-கான் சான் டியாகோவில் முத்திரை பதித்த முதல் இந்தியத் திரைப்படமாகும், இது அனிமேஷன் முறையில் முன்னுரை வீடியோ தொகுப்பு கொண்ட முதல் இந்தியத் திரைப்படம் மற்றும் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் 4 டன் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’யையும் காட்சிப்படுத்தி இதுவரையிலான திரை வரலாற்றில், பல புதுமைகளை நிகழ்த்திய படைப்பாக திகழ்கிறது இப்படம்.

Related Posts
1 of 13

எதிர்கால உலகில், காசியின் இருண்ட பக்கத்தில் அமைக்கப்பட்ட மியூசிக் வீடியோ ஒரு காட்சி அற்புதமாக அமைந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், குமாரின் பாடல் வரிகளில், தில்ஜித் டோசன்ஜ் மற்றும் விஜய்நரேன் பாடிய இப்பாடல், படத்தில் பிரபாஸின் பைரவா கதாபாத்திரத்தின் சரியான அறிமுகமாக அமைந்துள்ளது. போனி வர்மாவின் நடன அமைப்பில், தில்ஜித் மற்றும் பிரபாஸின் தனித்துவமான நடன அசைவுகளும், அற்புதமான காட்சியமைப்புகளும் கலந்து ரசிகர்களை மெய்மறக்க செய்கிறது!!

கல்கி 2898 கிபி படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உட்பட இந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ள இப்படம் 2024 ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.